தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் பொதுமுடக்கம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது
பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும், பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என 5முறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக ஒரு மாதம் என ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
கொரோனா தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ள நிலையில் தமிழக அரசு இதனை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கிறதா ? அல்லது இரண்டு வார காலத்திற்கு ஜூலை 15ம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புள்ளதா ? என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் அதாவது மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த ஒரு வார காலத்தில் மிக மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக காஞ்சிபுரத்தை ஒப்பிடும்போது மதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இன்று கூட அதிகமானோருக்கு கொரோனா உறுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் கொரோனா நோய் தொற்று எந்த பகுதியில் அதிகம் உள்ளதோ ? அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை கடுமையாக வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு வழங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு 7ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இருக்கின்றது.