கொரோனா பரவலைத்தடுக்க, தான் கூறிய யோசனைகளை முதல்வர் செயல்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
* ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 பண உதவியை நேரடியாக வழங்க வேண்டும்.
* சிறப்பு நிர்வாகக் கருதி, ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.
* நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் அளிக்க வேண்டும்.
* பல்கலைக்கழக இறுதியாண்டு மற்றும் பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
* முன்களப்பணியாளர்களாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.
* கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.
* கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.
* கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா? இல்லையா? என்பது பற்றி தெளிவான அறிக்கை பெற தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.
விடிய விடிய ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப பல்டி அடித்துவிட்டு, பின்னர் ஊடகங்கள் முன் ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று வழக்கம் போல் கூறாமல், இந்த ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு முதலமைச்சர் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது அதிகபட்ச நோய் தொற்றுக்கு உள்ளன டெல்லியில் நடைபெறும் கொரோனா பரிசோதனை விவரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வரை சந்தித்த நிபுணர் குழுவே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. டெல்லி மாநில அரசு போன்று பரிசோதனை முறையை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.