தனது மகளுக்காக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் உலக அழகி பட்டம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட தொடங்கினார். அதன்படி, இவர்கள் இருவருக்கும் பெண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தபின் அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கையை விட்டு நழுவிச் சென்றன. குழந்தை பிறந்த பின் பெரிதாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது. இது குறித்து அவரே தற்போது பதில் அளித்துள்ளார்.
அதில், எனது மகள் பிறந்த பின் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க இருக்கும் காட்சிகளைத்தான் தவிர்த்ததாகவும், இதன் காரணமாகவே படவாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சியை தனது மகள் படத்தை பார்த்துவிட்டு பின் முகம் சுளித்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்த அவர், படவாய்ப்புகள் இல்லை ஆனால் வருத்தம் இல்லை என் மகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இவரது இந்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.