Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்துகொண்ட நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை!

திண்டிவனத்தில் நான்கு மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் சக்திசங்கர்(28) – மகேஸ்வரி (25) தம்பதியினர். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சக்திசங்கர் பழக்கடையில் வேலைப் பார்த்து  வருகிறார்.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகிலன் என்ற குழந்தை உள்ளார். தற்போது, மகேஸ்வரி நான்கு மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், மகேஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது தாய்  நேற்று முன் தினம் வந்துள்ளார். ஆனால் மகேஸ்வரியை தாயுடன் அனுப்புவதற்கு சக்திசங்கர் மறுப்பு தெரிவித்ததுள்ளார்.   இது தொடர்பாக அன்றிரவு கணவன் – மனைவிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த மகேஸ்வரி அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி மனைவி ஒன்றரை வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |