Categories
மாநில செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லத்தச்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |