Categories
உலக செய்திகள்

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கறுப்பினத்தவர்… சுட்டுக்கொன்ற பிரபல தொழிலதிபர்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கருப்பினத்தவர் சீன தொழிலதிபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்

ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பது சீனா. அங்கிருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி, குரோமியம், இரும்பு போன்றவற்றை எடுக்க சீனா முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் அங்கு வசித்து வரும் நிலையில் சென்ற ஞாயிறு காலை Gweru மாகாணத்தில் செயல்பட்டுவந்த சுரங்கத்தில் பணிபுரியும் கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் சீனாவை சேர்ந்த தொழிலதிபர் சாங் ஸுன் என்பவரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tachiona என்பவர் தனது வேலைக்கான சம்பளத்தை வாங்க வரிசையில் நின்றிருந்த சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சாங் சுட்டதாக தெரிகின்றது. ஒரு முறை மட்டுமல்லாது இடது பக்க தொடையில் இரண்டு முறையும் வலது பக்க தொடையில் மூன்று முறையும் என ஐந்து முறை சுட்டுள்ளார். வேறு ஒருவருக்கும் கன்னத்தில் சுட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் உள்ளூர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்பினத்தவர் சுட்ட வழக்கில் அந்த சீனர் சாங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சீன நிறுவனங்களை மக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |