ஆன்லைனில் சீட்டாடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை பறிகொடுத்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
விக்கி சலேக்பல் திகன் என்ற 24 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகின்றார். இவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10,50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விக்கியின் தந்தை தன்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருக்கும் வீட்டை விற்பனை செய்து பெற்ற ரூ 18 லட்சத்து, 59ஆயிரம் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருப்பு வைத்துள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு தான் நாசிக்கில் ஒரு வீட்டை வாங்குவதற்கு விக்கியின் தந்தை திட்டமிட்டு இருந்தாராம்.. இந்தச் செய்தியை கேட்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.