Categories
தென்காசி மாநில செய்திகள்

மீண்டும் கொடூரம்…. போலீசார் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் மரணம்…. தென்காசியில் பரபரப்பு….!!

தென்காசி அருகே காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மீது இடப் பிரச்சினை காரணமாக செந்தில் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் குமரேசனை மே எட்டாம் தேதி அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரிக்கையில், இலேசாக அடித்து எச்சரிக்கையுடன் அனுப்பியுள்ளனர். பின் மே 10ஆம் தேதி மீண்டும் குமரேசனை விசாரணைக்காக அழைத்த காவல்துறையினர் அவரை மிகக்கடுமையாக காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். பின் அவரை விடுவிக்க , இங்கே நடந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது யாருக்கேனும் தெரிந்தால் பொய்வழக்கு பதிவு செய்வோம், உனது தந்தையையும் அடிப்போம் என்று கூறி, அவரை பயமுறுத்தி உள்ளனர். காவல்துறையினர் சொன்ன வார்த்தைகளினால் ஏற்பட்ட அச்சத்தினால் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார் குமரேசன். இதையடுத்து கடந்த ஜூன் 10ஆம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் மருத்துவர் விசாரிக்கையில், நடந்தவை அனைத்தையும் மருத்துவரிடம் அவர் கூற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் கிட்னி அவருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஒரு ஆய்வாளரை விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்  அதன்பேரில், விசாரணை ஒருபுறம் நடைபெற்று வர 16 நாட்கள் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமரேசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து அவரது மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என கூறி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |