Categories
தேசிய செய்திகள்

குழந்தையில்லை… கொடுமைப்படுத்திய கணவன்… தற்கொலை செய்த மனைவி… சிசிடிவியை பார்த்து அதிர்ச்சியடையந்த பெற்றோர்..!!

குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது

தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா, வெங்கடேஷ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக லாவண்யா தெரிவித்தார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விரைந்து வருவதற்குள் தனியாக இருந்த லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் லாவண்யா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் குழந்தை இல்லாததால் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சல் தரும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதுவே தான் தற்கொலை செய்து  கொள்வதற்கான  காரணம் என்றும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்த நிலையில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக புகார் அளித்த லாவண்யாவின் பெற்றோர் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் லாவண்யாவின் பெற்றோர்களுக்கு கிடைக்க அதில் பதிவாகி இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர். லாவண்யாவை வெங்கடேஷ் கடுமையாக தாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இணையவாசி ஒருவர் லாவண்யாவின் தற்கொலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “லாவண்யா எனது காலேஜ் சீனியர். மிகவும் கண்ணியமானவர்.

வேண்டுமென்றே லாவண்யா அவரது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அவரது கணவர் தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதோடு அவர் லாவண்யாவை ஏமாற்றியுள்ளார். இது தெரிந்தும் மூன்று முறை லாவண்யா மன்னித்து விட மீண்டும் வெங்கடேஷ் லாவண்யாவை ஏமாற்றியதால் அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாமலேயே இந்த முடிவை எடுத்துள்ளார். என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |