Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சுற்றுசூழல் பாதிப்பு” மத்திய அரசின் முடிவுக்கு ஐ.நா எதிர்ப்பு….!!

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு ஐநா பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் பல துறைகளை தனியார் மயமாக்குவதாக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், தற்போது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிட்டத்தட்ட 41 ஒரு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஐநாவின் பொது செயலாளர் ஆண்ட்ரோ குட்டரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருப்பதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்திய அரசு மட்டுமல்லாமல் பிற நாட்டு அரசுகளும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |