Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று கடந்த காலத்தை பற்றி தயவுசெய்து பிறரிடம் சொல்ல வேண்டாம். ஒரு பணி இலக்கு நிறைவேறும். தொழில் பணி சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு தான் கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை தயவுசெய்து விலைக்கு வாங்க வேண்டாம். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையாலேயே கொடுப்பீர்கள்.

எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். யோசித்து பின் காரியங்களைச் செய்யுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |