Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளைஞருடன் தகாத உறவு வைத்த மனைவி… நேரில் பார்த்த கணவன்… பின்னர் அரங்கேறிய சம்பவம்..!!

சாத்தூர் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கும் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவருக்கு வயது 26 ஆகிறது.. இவரது தனலட்சுமி (26) என்ற மனைவி உள்ளார்.. இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. இதனால், விக்னேஷ் குமார் சிவகாசியில் வசித்து வருகிறார்.. அதேபோல தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தனலட்சுமிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சதீஷ்(வயது 25) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் (ஜூன் 24) இரவு விக்னேஷ் குமார் திடீரென படந்தாலில் உள்ள மனைவி தனலட்சுமியின் வீட்டுக்கு  சென்றார்.. அப்போது சதீஷ் மற்றும் தனலட்சுமி இருவரும் ஒன்றாக இருந்ததை கண்ட விக்னேஷ், ஆத்திரமடைந்து சதீஸை கல்லால் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில், பலத்த காயமடைந்த சதீஷை அந்தபகுதியினர் மீட்டு சிவகாசியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பலியானார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய விக்னேஷ் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சிவகாசியிலிருந்து சதீஷின் உடலைக் கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |