விஜய்யின் படத்தை இயக்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவிப்பேன் என சேரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்
கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வீடியோவைக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் விஜய் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் போனில் பாராட்டியதை நிச்சயம் மறக்க முடியாது.
அதன் பிறகு அவர் என்னுடன் சேர்ந்து படம் பண்ண முடிவு செய்தார். ஆனால் நான் தான் “தவமாய் தவமிருந்து” படத்தை முடிக்காமல் இருந்ததால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போனது. அந்த தவறை செய்திருக்க கூடாது தவமாய் தவமிருந்து படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்று விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை இப்போது உணர்கிறேன். நான் செய்த தவறுக்கான வருத்தத்தை விஜயைப் பார்த்து நேரில் சொல்ல நினைக்கின்றேன்.
நிச்சயமாக நேரில் சந்திக்கும் பொழுது எனது வருத்தத்தை தெரிவிப்பேன். விஜயிடம் ஆட்டோகிராப் கதை சொன்ன அந்த மூன்று மணிநேரத்தை என்னால் மறக்க முடியாது. ஒரு அசைவின்றி, ஒரு போன்கால் இன்றி என் முகத்தை மட்டுமே பார்த்து கதை கேட்ட அவரது தன்மை கிரேட். இடையில் அவர் கேட்டது ஒரே வார்த்தை தான் தண்ணி வேணுமா அண்ணா. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இருந்தார். அதுவே இன்று அவரது உயரம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.