Categories
மாநில செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்!

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கையில் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது ஜனநாயக விரோதம், மாநில உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கடன் பெறும் வசதிகளை பாதுகாக்க இந்த அவசரச் சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்துமாறு தேவையான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |