கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநாவின் பொது செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல உலக நாடுகள் தொடர்ந்து பாடுபட்டு வரும் சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐநாவின் பொது செயலாளர் ஆண்டோனியா குட்ட்ரஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பு உலகநாடுகளில் கை மீறிப் போய்க் கொண்டிருப்பதாகவும், அதனுடைய பாதிப்புகளும், இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் உலக நாடுகள் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி மற்றும் பிற நாடுகளுக்கு வென்டிலேட்டர் வழங்கி உதவுதல் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் செய்வதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.