மதுரை பரவை சந்தையில் பணியாற்றிய 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை போல் மதுரை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி சந்தை என்றால் அது பரவை காய்கறி சந்தை தான். இந்த சந்தையில் மதுரை மக்கள் ஏராளமானோர் நாள் தோறும் தங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சமீபத்தில் மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், பெரும்பாலானோர் இந்த பரவை சந்தையுடன் தொடர்புடையவர்களாக இருந்த பட்சத்தில், அந்த காய்கறி சந்தை ஆனது கடந்த வாரம் மூடப்பட்டது.
இந்நிலையில் மதுரை பரவை சந்தையில் பணியாற்றி வந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த 2000 பேர் தற்போது மதுரை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா பரவியதை தொடர்ந்து மதுரை பரவை சந்தை மூலம் கொரோனா அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.