Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிச்சயித்த பெண்ணுடன் பேசிவந்த அதிகாரி திடீர் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், பவன்குமார் மீனா.  இவர் விருதுநகரில், மத்திய புள்ளியியல் துறையில், அதிகாரியாக  பணிபுரிந்து வந்தார். 31 வயதாகும் இவருக்கு கடந்த மே 14ல், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் பவன்குமார் மீனா, விருதுநகரில் உள்ள மதுரா கோட்ஸ் குடியிருப்பில், நண்பருடன் வசித்து வந்தார். ஊரடங்கால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க முடியாமலும், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று காலை நண்பருடன் டீ குடிக்க சென்று, அறைக்கு திரும்பிய அவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

நிச்சயமான பெண்ணுடன் ஏதேனும் பிரச்னை  ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்தாரா அல்லது வேறேனும் காரணத்தால்  மனஉளைச்சலால் இறந்தாரா என்பது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |