மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது.
சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை தொடர்ந்து, மதுரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேனியில் இன்று மாலை முதல் மறு உத்தரவு வரவும் வரை முழுஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களும் சேர்ந்துள்ளன.
மேலும் அநேக மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பல அறிவுரைகளை முதல்வர் இன்று வழங்க இருக்கிறார். நேற்று மட்டும் அரியலூர், திருப்பூரை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதியாகியிருந்தது. நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.