Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு எதிரொலி” தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை… எதிர்நீச்சலடிக்கும் தனியார் பள்ளி முதல்வர்…!!

ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் சோர்ந்து விடாமல் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். 

தெலுங்கானாவில் கம்மம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியின் முதல்வராக இருந்து வருபவர் ராம்பாபு மணிகார்.  கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் வேலை இல்லாமல் இருந்துவந்த ராம்பாபு என்ன செய்வது என திணறி  வந்துள்ளார். ஆனாலும்  சோர்ந்து போகாமல் சிற்றுண்டி கடை நடத்த முடிவு செய்து அதற்கு தேவையான இடம் மற்றும் அனுமதி கிடைக்காத போதும் தள்ளுவண்டியில் தனது கடையை திறந்துள்ளார்.

இவருக்கு துணையாக இவரது மனைவியும் உதவி செய்ய தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, வடை உள்ளிட்டவை விற்பனை செய்கிறார்.கொரோனா பரவலினால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ள நிலையில் பலர்க்கும்  வேலை  பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இச்சுழலில் இது குறித்து ராம்பாபு  கூறும் பொது “நீங்கள் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள்  சொந்த காலில் நில்லுங்கள்” என  நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூறியுள்ளார். வேலை இல்லாத நிலையில் அவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலரும் அவர்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |