Categories
மாநில செய்திகள்

ஜூன் 25, 26ல் கோவை, திருச்சிக்கு முதல்வர் பயணம்… அத்திக்கடவு அவினாசி, குடிமராமத்து பணிகளை ஆய்வு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு மாலையில் சேலம் செல்கிறார்.

இதையடுத்து முதல்வர் வரும் 25ம் தேதி சேலத்தில் இருந்து கோவை பயணம் மேற்கொள்கிறார். அங்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து வரும் 26ம் தேதி அவர் திருச்சி பயணம் செய்ய உள்ளார் அங்கு குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து 25ம் தேதி கோவை செல்லும் அவர், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதில், 115 கி.மீ தொலைவில் பிரம்மாண்ட பைப்லைன் அமைக்கும் பணிகள், பெருந்துறை அருகே 30 மெ.வாட்ஸ் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் பாசன வசதிகள் பெறும்.

இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து 26ம் தேதி திருச்சி செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள், முக்கொம்பு அணை கட்டும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளார்.

Categories

Tech |