Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு… லடாக் எல்லையில் இருந்த படைகளை விலக்கிக்கொள்ள முடிவு..!!

கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராணுவ உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது.

அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. லடாக் எல்லையில் கால்வான் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்ற பொழுது இந்திய வீரர்கள் தடுத்தனர். இதனால், கடந்த வாரம் முதல் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் மூண்டது. இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது. குறிப்பாக கைகளை வைத்தும் கற்களை வைத்தும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டை போட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இருநாடுகளுக்கும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது.

இதையடுத்து இருநாட்டு எல்லையிலும் சர்ச்சைக்குரிய 5 இடங்களில் படைகளை இந்திய – சீன ராணுவம் நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க நேற்று மோல்டோ என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என இருதரப்பும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |