அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதித்த 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க உள்ளார். அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.