Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 1,358 பேர் குணமடைந்தனர்.. இதுவரை 34,112 பேர் டிஸ்சார்ஜ்.. சுகாதாரத்துறை..!!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், கண்ணனுக்கு தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து களத்தில் நின்று முன்களப்பணியாளர்கள் போராடி வருகிறார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 46 அரசு பரிசோதனை மையங்களும் , 41 தனியார் மையங்களும் உள்ளன.

தினமும் 30,000 பரிசோதனை எடுக்கும் அளவுக்கு பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இதுவரை 9,19,204 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |