Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 17 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 226 பேர்.. சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இதுவரை 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, இதுவரை கொரோனவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நாளை முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில், நாளை முதல் காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும். ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மதுக்கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். வெளியில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் புதுவையில் கொரோனா பரவியது என நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |