டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 59,746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,175 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இதுவரை 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை சிகிச்சையில் 24,558 பேர் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகம்,டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடத்தில் உள்ளன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தில் டெல்லி முன்னேறியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.