Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடுவர் செய்த தவறு கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல……ரோஹித் சர்மா வருத்தம்..!!

 “நோ பால்” மூலம் வெற்றி பெற்றதற்கு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலையை தெரிவித்துள்ளார்.     

ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில்  வெற்றி பெற்றது. ஆனால் “நோ பால்” மூலமாக வெற்றி பெற்றது பின்னர் தான் தெரியவந்தது..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. நிறைய கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் இந்த   தவறு நடந்திருக்கிறது. நடுவர்கள் இதனை சரியாக பார்த்திருக்க வேண்டும். “மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி வெற்றியே கிடையாது” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, உண்மையில்  நான் எல்லை கோட்டை கடந்த பின்னர்  தான் மலிங்கா வீசியது நோ-பால் என்று எனக்கு தெரியும் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.  இதுபோன்ற தவறுகள் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லது கிடையாது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஒரு பந்து “வொய்டு” என்று நடுவர் அறிவித்தார். ஆனால் அந்த பந்து “வொய்டு” கிடையாது. மேலும் இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எடுத்தது குறைவான ரன்களே. இது சவாலான இலக்கு கிடையாது. இந்த ஆடுகளத்தில்  200 ரன்கள் குவித்திருக்க வேண்டும். இருந்தாலும்  எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். விராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் பாட்னர் ஷிப்பை கண்டு நாங்கள் பயப்படவில்லை. எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்பினேன் என்றார்.

 

 

 

Categories

Tech |