Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!

கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கோவையில் இயங்கிவரும் ஜிஆர்டி-யில் உரிய அனுமதி இன்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்களை அழைத்து வந்தது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை ஜிஆர்டி-யில் பணிபுரிந்தவர்கள் ஆவர். இதையடுத்து, நகைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |