சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது
இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் இமானுவேல் கூறுகையில் “பாதுகாப்பு பணியில் இருந்த பொழுது மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார். இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிந்தர் கூறுகையில் “கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவிக்கின்றோம்” என கூறியுள்ளார்.