Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழகத்தில் இன்று மட்டும் 1,630 பேர் டிஸ்சார்ஜ்.. 30,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை !!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 30,217 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.59% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |