திருவள்ளுவர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,237 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அண்டை மாவட்டங்களாக உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து இருக்கின்றது.
இந்த நிலையில் தான் இந்த 4 மாவட்டங்களுக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலாகியுள்ளதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 2,237 ஆக அதிகரித்துள்ளது.