Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது… ரயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..!!

செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில்  அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் பரிதாபமாக பலியானார்.. இதனைப்பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் லோகநாதன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |