Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலப்பிரச்னை… போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சி..!!

நிலப்பிரச்னை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்ச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது முருகனை காவல்துறையினர் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |