Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூரில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசு பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி முக கவசங்கள், தெர்மல் ஸ்கேனிங், தனி நபர் பாதுகாப்பு உடைகள் கிருமி நாசினி மற்றும் பொருட்கள் கிருமி நாசினி வாகனம் வாங்க ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக ரூ. 21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |