திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருச்சி கோ.அபிஷகபுரத்தில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகிய 3 பேருக்கும் ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபங்கள் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மண்டபம், அல்லாள இளைய நாயக்கர் குவிமாட மண்டபத்திற்கு முதல்வர் அடிக்கல் நாடியுள்ளார். அல்லாள இளைய நாயக்கருக்கு ரூ. 21.80 லட்சம் மதிப்பில் குவிமாட மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல கன்னியாகுமரி தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மண்டபம் ரூ.92.27 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. ரூ. 3.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.