பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில்,
முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.
நாடு முழுவதும் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் சென்னையில் மட்டுமே இருக்கிறார்கள்.
435 பேர் இறந்து விட்டார்கள். கடைசி 15 நாட்களில் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள்.
தனக்கு கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டு தவறுகளையும் குழப்பங்களையும் விளைவித்திருக்கின்றது அதிமுக அரசு.
தரமற்ற பரிசோதனை கருவிகளை அவசரமாக வாங்கியது முதல் தொடக்கத்தில் மிகக் குறைவான பரிசோதனைகள் ( 10 லட்சம் பேருக்கு 32 பரிசோதனைகள் 10 லட்சம் பேருக்கு 32 பரிசோதனைகள்) வரை பல தவறுகளை செய்து இருக்கிறது அரசாங்கம்.
ஊரடங்கிற்குள் ஊரடங்கு என திடீர் பதற்றத்தை உருவாக்கி கோயம்பேடு சந்தைகளிலும் கடைகளிலும் கூட்டம் கூடக் காரணமாக இருந்தது அதிமுக அரசு.
டாஸ்மாக் கடை திறப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு என தொடர்ச்சியாக ஊரடங்கு காலத்திலும் குழப்பங்களை செய்தார்கள்.
தினசரி அரசு வெளியிடும் கொரோனா குறித்தான செய்தி குறிப்புகளில் பல வகையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
236 பேரின் மரண மறைக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன .
பத்தாம் வகுப்பு தேர்வு, நடமாடும் மருத்துவமனைகள் என திமுக முன்வைக்கும் யோசனைகளை முதலில் மறுத்து விட்டு பின்னர் நிலைமை முற்றிய பிறகு செயல்படுத்துகிறது அதிமுக அரசு.
அரசின் பொறுப்பற்ற தன்மையால், நிர்வாகக் குளறுபடிகளால், அமைச்சர்களுக்கிடையேயான ஈகோ சண்டைகளால் பேரிடர் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கின்றோம்.
முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகள்….
அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதும் சமூக பரவல் இல்லை என்பது உண்மை என்றால் ஏன் கொரோனா தொற்று தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது?
பொய் பேட்டிகளை எல்லாம் நிறுத்திவிட்டு மேல் நோக்கி உயரும் கொரோனா படத்தை தட்டையாக்குவதற்கு செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள் ?
ஊரடங்கு காலத்தில் கமிட்டி கமிட்டி நியமித்து, பிரச்சனைக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?
ஆக்கப்பூர்வமாக ஆதரவு அளிக்க முன்வந்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேச தொடக்கத்திலிருந்தே மறுப்பது ஏன்?
பெயரளவிலான அறிவிப்புகளை நிறுத்திவிட்டு பட்ஜெட்டை மாற்றி அமைப்பது, பொருளாதார மீட்பு, வேலை இல்லா திண்டாட்டத்தை போக்குவது போன்ற பிரச்சனைகளில் அரசு எப்போது ஆர்வம் காட்டுகிறது.
இவை அரசியல் கேள்வி அல்ல அரசியலுக்கான கேள்வி இல்லை இவை மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள் மக்களின் சார்பில் நான் கேட்கிறேன் என திமுக தலைவர் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்சங்கள் குறித்து இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#Lockdown– களில் அதிகரித்த #COVID19 தொற்றின் எண்ணிக்கை, தேதிவாரியாக அரசின் குளறுபடிகள், மறைக்கப்படும் விவரங்கள்,மரணங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் முன்வைத்து, @CMOTamilNadu-க்கான கேள்விகள், இனி அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைளை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொண்டேன்! #WakeUpEPS pic.twitter.com/sCQTfLlEbB
— M.K.Stalin (@mkstalin) June 15, 2020