MGR பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி ஒருவர், இறந்த 8 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் கழிவறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு கூட வளாகத்தில் கொரோனா மருந்து கழிவுகளை அங்கு சுற்றித் திரிந்த 10 தெரு நாய்கள் சாப்பிட்டு உயிர் இழந்துள்ளன.
இந்த நாய்கள் மூலமாகவோ அல்லது மருத்துவர்களின் அலட்சியத்தினாலோ அங்குள்ள ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் இப்படி கொரோனா பரவும் சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.