2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி லோகேஷ் குமார் என்பவர் பரிதாபமாக பலியானார்..
திருவள்ளூர் மாவட்டம் சென்றன்பாளையம் பஜனை கோயில் தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் குமார். 24 வயதுடைய இவர், நேற்றிரவு (ஜூன் 13) சீத்தஞ்சேரியில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, எதிரே வந்த பைக்கும் இவரது வாகனமும் நேருக்குநேர் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் குமார் பரிதாபமாக பலியானார்.
மேலும் எதிரே வந்த பைக்கை ஓட்டி வந்த லோகநாதன் (வயது 60) என்பவர், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டார போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் பலியான லோகேஷ்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் இளைஞர் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இதனால், அரசு மருத்துவமனையில் திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் ஓன்று கூடியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.