ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதம் இலங்கையில் வைத்து நடத்தலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார்
மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சுனில் கவாஸ்கர் “வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாது. காரணம் அது பருவமழை காலம். அதனால் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் வைத்து போட்டிகளை நடத்தலாம்.
மேலும் ஆஸ்திரேலியா கொரோனா இல்லாத நாடாக இருப்பதால் அக்டோபர் மாதத்தில் அங்கு வைத்து டி20 உலகக்கோப்பை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. போட்டி தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே அங்கு சென்றால் தான் முறையாக ஒரு வாரமாவது பயிற்சி எடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார்