தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, பெரம்பலூரில் 1, வேலூரில் 9, தேனியில் 8, ராமநாதபுரத்தில் 23, திருவாரூரில் 8, திருப்பூரில் 1, நாகப்பட்டினத்தில் 7 என மொத்தம் 30 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர், தூத்துக்குடி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று இல்லை என குகைதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 9 பேர், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து 4 பேர், தாய்லாந்தில் இருந்து 3 பேர், சவூதி அரேபியாவில் இருந்து 2 பேர், யு.ஏ.இ-ல் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.