திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,797ஆக அதிகரித்துள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,797 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 848 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 928 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உள்ளது என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதன் பரலை தடுக்கும் நோக்கத்தில் தூய்மை செய்யப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.