Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள் … ஒரே மாதிரி பதிலடி கொடுத்து அசத்தல் …!!

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இவர் மீதும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் அடுத்தடுத்து வேறுவேறு இடங்களில் கேள்வி கேட்ட போது இருவரும் ஸ்கெட்ச் போட்டு பதிலளித்ததை போல ஒரே மாதிரி கூறினர். முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை தொடக்கி வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அப்போது, வானதி சீனிவாசன் அவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கக்கூடிய 53 வயதுள்ள ஒரு நோயாளி பத்தி ட்விட்டரில் போட்டிருந்தாங்க. அங்கே டாக்டர் ரமேஷ் அவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, அந்த நோயாளியை பார்த்தாங்க. அவரு நன்றாக இருக்கின்றார். அதையடுத்து வானதி சீனிவாசன் ஒரு மணி நேரத்தில் மருத்துவத்துவர்கள் நல்ல சிகிச்சை கொடுக்குறாங்க என பாராட்டி ஒரு ட்விட்  போட்டு இருக்காங்க. இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது. வரதராஜன் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

பின்னர் சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது , வானதி சீனிவாசன்  திருப்ப ரீட்வீட் போட்டு இருக்காங்க. அரசுத் துறை நடவடிக்கை எடுத்திருக்கு என்று… பிரச்சனை முடிந்து விட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் கொடுத்துள்ளார். அந்த பதிலே போதும் என்று முடித்துள்ளார். இருவரும் அடுத்தடுத்து பதிவிட்ட ட்விட் வைத்து இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Categories

Tech |