Categories
கரூர் மாவட்ட செய்திகள்

டிக் டாக் காதல்… காதலனை தேடி சென்றாரா சிறுமி?…. பெற்றோர் புகார்… போலீஸ் விசாரணை..!!

டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு  17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு கீதாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியுள்ளனர். ஆனால், தங்களது மகள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கீதாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தோஷ் என்பவருக்கும் ‘டிக் டாக்’ மூலம் காதல் ஏற்பட்டது தெரியவந்தது.. இதன் காரணமாக சிறுமி அவருடைய காதலனை தேடி வெளியில் சென்றிருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |