Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்…!!

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ்  வழங்கப்பட்டது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர்  திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி  ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vijaysedhupathi-superdeluxe

இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு ‘யூ’ மற்றும் ‘யூஏ’ சான்றிதழ்கள் கொடுக்க முடியாது என்று கூறி ‘ஏ’ சான்றிதழை மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும் இப்படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியாது  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே தியாகராஜ குமாரராஜா இயக்கதில் உருவான ஆரண்ய காண்டம் படத்திற்கும் தணிக்கைக்குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.எனவே விரைவில் சூப்பர் டீலக்ஸ் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |