செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தொற்று வேகமாக பரவி, பொதுமக்களின் மனிதில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக கொரோனா அதிவேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்த வேண்டும். எத்தனை நோயாளிகள், எவ்வளவு பரிசோதனைகள், எத்தனை மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.