Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று முதல் 15ம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோரப்பகுதிகளில், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதையடுத்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |