Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து… 23 பெண்களுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்த செவிலியர்… குவியும் பாராட்டுக்கள்..!!

சர்குஜா மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஒருவர் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 23 பிரசவங்களை வெற்றிகரமாக செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்திலுள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணியாற்றி வரும் ரஜினி குஷ்வாஹா என்பவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் 23 கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து செவிலியர் ரஜினி குஷ்வாஹா கூறுகையில், “நான் செய்யும் வேலை எனக்கு மிகவும் மனநிறைவை தருகின்றது.. மற்ற சுகாதார மருத்துவ நிலையங்கள் இருந்தாலும் கூட கர்ப்பிணி பெண்கள் அனைவரும் என்னைத் தேடிவருவது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். இந்த செவிலியர் அம்பிகாபூர் பகுதியில் பெண்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும்  ஏற்படுத்தி வருகிறார்.

Categories

Tech |