தமிழகத்தின் பள்ளி கல்வி துறை அலுவலகம் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளவதற்கு மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சனிக்கிழமை இந்த பணியை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் ஆலோசனை அளித்து விட ,
அதன் பெயரில் தலைமைச் செயலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்துவதற்காக இரண்டு நாள்கள் மூடப்பட, இதை தொடர்ந்து DPI அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கட்டிடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியானது அலுவலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.