இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விக்கலாம் அளித்துள்ளார்.
தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டள்ளது. இதன் காரணமாக பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட வருகின்றன.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 20-ல் வெளியிட்ட அறிவிக்கைப்படி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வினை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும், தேதிகள் ஏதும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40,000த்தை கடந்த நிலையில், தேர்வுகள் தற்போதைக்கு நடத்த வாய்ப்புகள் இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.