Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்னிடம் அவர் பேசினார்… அதையும் நீங்க கேளுங்க…. மாஸான பதில் அளித்த விஜயபாஸ்கர் …!!

இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  இதுவரைக்கும் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் டெஸ்ட் செய்துள்ளோம் எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் டெஸ்ட் எடுத்திருக்காங்க, ராஜஸ்தானில் 5.4 லட்சம் எடுத்திருக்காங்க, ஆந்திரப் பிரதேசத்தில் 5 லட்சம், கர்நாடகாவில் 4 லட்சம், உத்தரப்பிரதேஷத்தில் 4 , மேற்கு வங்கத்தில் 3 லட்சம் டெஸ்ட் செய்துள்ளார்கள். இந்தியாவிலே அதிகமாக டெஸ்ட் நாம் எடுத்துள்ளோம்.

எவ்ளோ பெரிய மருத்துவ வல்லுநர்களை கேளுங்க டெஸ்ட் அதிகமா எடுக்கிறது தான் ஒரு நல்ல ஸ்ட்ராடஜி ( உக்தி ) டெஸ்ட் பண்ணுனாதான் பாசிட்டிவ் கண்டறிய முடியும், அப்பத்தான் அவர்களை கண்காணித்து சிகிச்சை கொடுக்க முடியும். அப்போதான் அவங்ககிட்ட இருந்து கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்த பணியை தான் நாம் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றோம், தொடர்ந்து சோதனையை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு சரியான சிகிச்சை கொடுக்கப்படவில்லை, அவர்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை செய்து வருகின்றார்கள் என்ற குற்றசாட்டை அரசு மருத்துவர்கள் சங்கம்  முன்வைத்துள்ளார் ? என்ற கேள்விக்கு,

அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில், இன்னொரு பேட்டியும் கொடுத்துள்ளார். மருத்துவர்கள் அதிகமானோரை  நியமனம் செய்துள்ளோம் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்  என்றும் தெரிவித்துள்ளார். அதே போல மருத்துவர்களுக்கு நல்ல முறையில் உணவு கொடுக்குறீங்க என்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த கேள்வியையும் நீங்க கேட்கலாம், என்னிடம் தொலைபேசியில் பேசினார். அரசு மருத்துவர்களுக்கு பாசிட்டிவ் ஆக கூடிய நிலை அறிந்தும், தெரிந்தும் அவர்கள் களத்தில் பணியாற்றினார்கள். அதைத் தாண்டி நாம் எவ்வளவுதான் தலைமுதல் கால் வரை போடக்கூடிய முழு கவச உடை பாதுகாப்பு கொடுத்தாலும் கொரோனா வர வாய்ப்பு உள்ளது.

வானதி சீனிவாசன் டுவிட்டரில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்ததுள்ளார். ஏற்கனவே வரதராஜன் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் அதே போல அவர்கள் மீதும்  நடவடிக்கை எடுப்பீர்களா ? என்ற கேவிக்கு,

வானதி சீனிவாசன் அவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கக்கூடிய 53 வயதுள்ள ஒரு நோயாளி பத்தி ட்விட்டரில் போட்டிருந்தாங்க. அங்கே டாக்டர் ரமேஷ் அவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, அந்த நோயாளியை பார்த்தாங்க. அவரு நன்றாக இருக்கின்றார். அதையடுத்து வானதி சீனிவாசன் ஒரு மணி நேரத்தில் மருத்துவத்துவர்கள் நல்ல சிகிச்சை கொடுக்குறாங்க என பாராட்டி ஒரு ட்விட்  போட்டு இருக்காங்க. இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது. வரதராஜன் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார்

Categories

Tech |