Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்டை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி பங்கீடு தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் 17ம் தேதி மாலை 3 மணிக்கு பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 17ம் தேதி பிரதமர் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கு முன்னர் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |